Local News

கப்பலூர் சுங்கச்சாவடி இனி இருக்கக்கூடாது. ஆவேசமான மதுரை மக்கள்

Published on

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி இனி இருக்கக்கூடாது.. ஆவேசமாக வந்த உள்ளூர் மக்கள்.. ஆடிப்போன அதிகாரிகள்..

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு நள்ளிரவு (ஜூலை 10) முதல் அமலுக்கு வந்ததால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில், உள்ளூர் பொதுமக்கள், அதிமுகவினர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Exit mobile version