மதுரை நகரம்
திருப்பரங்குன்றம் தெப்ப திருவிழா 2023: 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Warning: Undefined variable $post in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 114
Warning: Attempt to read property "ID" on null in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 114
Warning: Undefined variable $post in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 115
Warning: Attempt to read property "ID" on null in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 115
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று திரளான பக்தர்கள் படம் பிடித்து தேரை இழுக்க தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியான இன்று தை தெப்பதிருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைதெப்ப திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தை தெப்பதிருவிழாவை முன்னிட்டு, இன்று 3 ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.
இந்த நிலையில் விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான தை கார்த்திகை முன்னிட்டு இன்று தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் உள்ள சிறிய வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நாளை நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் அருள்பாளிப்பார்கள். இதே நிகழ்ச்சி இரவில் மின்னொளியிலும் நடைபெறும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தை தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இன்று சிறிய வைரதேரோட்டமும், தொடர்ந்து நாளை தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது.