மற்ற செய்திகள்
கேரளாவில் மஞ்சள் அலர்ட்: அந்த 12 மாவட்டங்கள் இவை தான்..
இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Warning: Undefined variable $post in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 114
Warning: Attempt to read property "ID" on null in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 114
Warning: Undefined variable $post in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 115
Warning: Attempt to read property "ID" on null in /home4/a1626hxc/maduraicity.co.in/wp-content/themes/click-mag/amp-single.php on line 115
இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஐஎம்டி எச்சரிக்கையின் படி, அக்டோபர் 20 ஆம் தேதி வரை மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி கணித்துள்ளது.
ALSO READ: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கொட்டப்போகிறது மழை: வானிலை எச்சரிக்கை
மேலும் வியாழக்கிழமை எர்ணாகுளம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு.இதனைத்தவிர 19 ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், 20 ஆம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கும், 21 ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Edited By: Sugapriya Prakash