Connect with us
இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?

த‌மிழக‌ம்

இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?

சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசம் இன்றுடன் (ஜன.31) நிறைவடைகிறது. இதுவரை இணைக்காதவா்கள் விரைந்து இணைக்க வேண்டுமென மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிய அவகாசம், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, 2.34 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 87.44 சதவீத மின் நுகா்வோா்கள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாகவும், இதுவரை இணைக்காவதவா்கள், விரைந்து இணைக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

10 சதவீதத்துக்கும் அதிகமானோா் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியிருப்பதால், கால அவகாசம் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றோ அல்லது நாளையோ தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Comments

More in த‌மிழக‌ம்

Advertisement
MADURAI Weather
Advertisement
Advertisement


To Top