Civic Issues

மதுரையில் முதல் முறையாக டிஜிட்ஆல் டெக்னாலஜி கண்காட்சி

Published on

மதுரை நகரில் முதல் முறையாக டிஜிட்ஆல் அமைப்பு நடத்தும் டிஜிட்ஆல் டெக்னாலஜி கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் இந்த தொழில்நுட்பக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக கண்டுகளித்து பயனடையலாம்.

தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் ஒரு அங்கமான டிஜிட்ஆல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முழுநாள் உச்சி மாநாடாக டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பம்சமாக டிஜிட்ஆல் சங்கமம் 2023 இரண்டு நாட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் என நடைபெற உள்ளது. அக்டோபர் 13ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு டிஜிட்ஆல் எக்ஸ்போ கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் திரு. என்.ஜெகதீசன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

மதுரை நகரில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த தொழில்நுட்ப கண்காட்சி குறித்து டிஜிட்ஆல் தலைவர் திரு.ஜே.கே.முத்து கூறுகையில், டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்ஆல் அமைப்பு தொடர்ந்து கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் சங்கமம் என்ற பெயரில் முழு நாள் உச்சி மாநாட்டினையும் நடத்தி வருகிறோம். ஆறாவது ஆண்டாக இந்த ஆண்டு டிஜிட்ஆல் சங்கமம் கூடுதல் சிறப்பம்சமாக டிஜிட்டல் கண்காட்சியை நடத்துகிறோம். மதுரையில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த டிஜிட்டல் கண்காட்சியில் டிஜிட்டல் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் ஏராளமான ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.

தொடர்ந்து அக்டோபர் 14ம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கம் தொடங்குகிறது. இதில் சிறப்பு விருந்தினராக வைகை குழுமம் மற்றும் யெஸ் அமைப்பின் தலைவர் திரு. வி.நீதிமோகன் கலந்து கொண்டு சிறந்த உறுப்பினர்களுக்கான டிஜிட்ஆல் விருதுகளை வழங்குகிறார். டிஜிட்ஆல் அமைப்பில் உறுப்பினராக இணைந்து, டிஜிட்ஆல் மூலம் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, அதனை தங்களது தொழிலில் புகுத்தி வெற்றி பெற்ற 10 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது, என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.என்.ஜெகதீசன் கூறுகையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் துவக்கப்பட்ட அமைப்புகளில் டிஜிட்ஆல் அமைப்பும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டிஜிட்ஆல் அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. சரியாக ஒரு தலைமுறை இடைவெளியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சங்கமம் நிகழ்ச்சி டிஜிட்டல் கண்காட்சியுடன் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும். இந்த கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக் கொள்கிறோம், என்றார்.

இந்த ஆண்டு சங்கமம் மாநாடு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்தி நடைபெறுவதால், ஏஐ சார்ந்த தலைப்புகளில் கருத்தரங்கங்கள் இடம்பெறுகின்றன. சிறப்பு பேச்சாளர்களாக திரு.டிஜிட்டல் தீபக் (பிக்ஸல் ட்ராக் நிறுவனர்), திரு. ஏ.பால கிருஷ்ணன் (ப்ளாக் ஷிப் சேனல் தலைமை நிர்வாக அதிகாரி), திரு.கோபால் கிருஷ்ணன் (பிங்கி மார்க்கெட்டிங் நிறுவனர்), திரு. பிரகதிஷ் (தேனீர் இடைவேளை சேனல் தலைவர்), திரு. பஹீம் (பைட் டிஜிட்டல் தலைவர்), டாக்டர் ஹேமா (இ-காமர்ஸ் பிஸினஸ் கோச்), திரு.வினோத் (அமேசான் வெப் சர்வீசஸ் இந்திய விரிவாக்கத் தலைவர்), திரு.விக்னேஷ் அண்ணாமலை (டெக் மேக்ஸிமா தலைவர்), திரு. பிரவின் ஜெயகுமார் (அமேசான் வெப் சர்வீசஸ் மிஷின் லேர்னிங் ஆர்கிடெக்ட்), திரு.சரவணன் ராமானுஜம் (அமேசான் வெப் சர்வீசஸ் உற்பத்தி துறை அப்ளிகேசன் தலைவர்), ஹேமா ராகேஷ் (டிஜிட்டல் இன்புளுயன்சர்), திரு.நந்தகுமார் (கோப்ருகல் டெக்னாலஜி மார்க்கெட்டிங் துணைத்தலைவர்), திரு.செந்தில்நாயகம் (செடின் டெக்னாலஜி இயக்குனர்), திரு.அபினித் ஜெயின் (வினிதாஸ் ஹேர் & மேக்கப் நிர்வாக இயக்குனர்) ஆகியோர் கலந்து கொண்டு ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசுகிறார்கள்.

பேட்டியின்போது, டிஜிட்ஆல் அமைப்பின் துணைத் தலைவர்கள் திரு. சரவணன் ராமதாஸ், திரு. மதன் வைப்ர நாராயணன், திரு. சாகித் அலி மற்றும் திரு.மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Ad
Start Your D2C Store
Direct-to-Consumer Selling
Launch your brand with an eCom site. Reach customers directly.
maduraicity.co.in/d2c-sales
Ad
Influencer Marketing
Reach Tamil Audience
Work with top influencers in Madurai. Drive trust & engagement.
maduraicity.co.in/influencer-marketing
Ad
Email Marketing Tools
Campaigns That Convert
Design, send, and track email campaigns. Engage more customers.
maduraicity.co.in/email-marketing

Exit mobile version