You will deploy this on your site to enable ad blocking recovery
Connect with us

த‌மிழக‌ம்

இன்று 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இன்று இடி மின்னலுடன் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று  கோவை நீலகிரி திண்டுக்கல் தேனி நெல்லை தென்காசி கன்னியாகுமாரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மேலும் தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளையும் ஓரிரு இடங்களில் இடம் மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரங்கள் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading
Advertisement
You may also like...

More in த‌மிழக‌ம்

Advertisement
MADURAI Weather
Advertisement
Advertisement
Advertise with MaduraiCity.co.in
To Top